விக்டோரிய மாநிலத்தில் அடுத்த வருடம் முதல் மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடு கொள்கையில் முக்கிய மாற்றம் வரவுள்ளது.
இதற்கமைய மாநில அரச பாடசாலைகளில் சேர்ட், கால்சட்டை ,பாவாடை மற்றும் காலணிகள் ஆகியவற்றில் சின்னங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பிரிமீயர் ஜெசிந்தா ஆலன் மற்றும் கல்வி அமைச்சர் பென் கரோல் ஆகியோர் இணைந்து இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளனர்.
பெற்றோருக்கு கூடுதல் நிதி சுமையை குறைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலை சீருடைகளை 'பெருமையுடன்" அணிய வேண்டும் என்றாலும், அவை இன்னும் மலிவு விலையில் இருக்க வேண்டும் என்று மாநில பிரீமியர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பாடசாலையின் தனித்துவத்த தக்க வைக்க சில இடங்களில் சின்னங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
சபா.தயாபரன்