தான் பயணிக்கவிருந்த சர்வதேச விமானத்துக்கு ஒன்லைன்மூலம் மிரட்டல் விடுத்த சிட்னி தென்மேற்கு பகுதியை சேர்ந்த நபருக்கு 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 19 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்வதற்கு தயாரான விமானத்துக்கே 22 வயதான குறித்த இளைஞன், ஒன்லைன்மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து விமானத்துக்குள் சோதனை நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறு மிரட்டல் விடுத்துவிட்டு குறித்த இளைஞன் அதே விமானத்தில் சிட்னியில் இருந்து பயணித்துள்ளார்.
2025 ஜனவரி மாதம் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியபோது அவரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.