ஆஸ்திரேலியாவின் மிகக் கொடூரமான குற்ற கும்பலை சேர்ந்த நிழல் உலக தாதா ஒருவர் சுமார் 18 வருடகால சிறை தண்டனைக்கு பிறகு இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியாவை சேர்ந்த 59 வயதான டோனி மோக்பெல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இவருக்கு பிணை கோரி கடந்த வாரம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இம்மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் விசாரணைக்குட்படுத்தி, பிணை வழங்க அனுமதி வழங்கியது.
2007 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் தலைமறைவானதால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார்.
ஜி.எஸ்.பி. கண்காணிப்பு, ஊரடங்கு உத்தரவு, தினசரி பொலிஸ் பதிவு, விக்டோரியாவை விட்டு வெளியே தடை உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடனேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.