மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுவதிமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் நிறுத்தல் சமிக்ஞையை பொருட்படுத்தாது, வாகனமொன்று தப்பிச்சென்றுள்ளது.
அவ்வானத்தை பின்தொடர்ந்து சென்று பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது காருக்குள் இருந்து 29 வயது யுவதியொருவர் துப்பாக்கியுடன் வந்து பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்தே தற்காப்பு கருதி அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 27 வயது ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.