பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவேளை தனது முன்னாள் காதலியை 78 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 மார்ச் மாதமே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இரு கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 21 வயதான மெக்கன்சி ஆண்டர்சன் என்பவரே கொல்லப்பட்டவராவார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் கொலையாளியான 25 வயதுடைய தாம்சன் கடந்த ஏப்ரல் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையிலேயே இன்று மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணை இவர் 2021 ஆம் ஆண்டும் தாக்கியுள்ளார். சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளார். அக்குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்ட அவர், 2022 மார்ச் 9 ஆம் திகதி பிணையில் விடுக்கப்பட்டார்.
இவ்வாறு பிணையில் வந்து 16 நாட்களுக்கு பிறகே நியூகேஸில் உள்ள வீட்டில் வைத்து தனது முன்னாள் காதலியை தாம்சன் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.