பாதாள குழுக்கள் மற்றும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களை குறிவைத்து ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின்போது 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் இணைந்து முன்னெடுத்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி உட்பட 130 இற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.
Wodonga, Cobram மற்றும் Echuca ஆகிய இடங்களில் குற்றச்செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது என விக்டோரிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸாரின் வலையில் சிக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.