குயின்ஸ்லாந்தின், டூவூம்பாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறார்கள் பலியான சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மே 7 ஆம் திகதியே தீ விபத்து இடம்பெற்றது. வீட்டுக்குள் ஏழு பேர் இருந்தனர்.
தீ விபத்தில் சிறுவன் ஒருவர் வீட்டுக்குள்ளேயே இறந்தார். 36 வயது பெண், 34 வயது ஆண் மற்றும் 3 சிறார்கள் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும்போது இரு சிறார்கள் இறந்தனர்.
குழந்தைகளின் தாயென நம்பப்படும் பெண் கடும் எரிகாயங்களுடன் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தீ வைப்பு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
வீட்டில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குழந்தைகள் எரிக்கப்பட்டனரா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.