கிறீன்ஸ் கட்சியின் தெற்கு ஆஸ்திரேலிய அரசியல்வாதியான டாமி பிராங்க்ஸ், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அத்துடன், அடுத்த மாநில தேர்தல்வரை சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அவர் இன்று அறிவித்துள்ளார்.
' இது இலகுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. நீண்டகால கலந்துரையாடலுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும்."- என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து விலகும் முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தாலும், கூட்டாட்சி தேர்தலில் அது தாக்கம் செலுத்தக்கூடாதென்பதாலேயே மௌனம் காத்ததாகவும் டாமி பிராங்க்ஸ் கூறியுள்ளார்.
டாமி பிராங்க்ஸ் முதன்முறையில் 2010 ஆம் ஆண்டு மாநில நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். 2026 தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.