எதிர்க்கட்சி தலைவர் சூசன் லேயின் தாயார் இன்று காலை காலமானார்.
தெற்கு நியூ சவூத் வேல்ஸிலுள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.
' எனது தாயார் ஒரு செவிலியர். அவர் பலருக்கு சேவை வழங்கியுள்ளார். அவரின் மறைவு பேரிழப்பாகும்." - என்று அறிக்கையொன்றின் ஊடாக துயர் பகிர்ந்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
' கடைசியாக ஒருமுறை என் அம்மாவுடன் அன்னையர் தினத்தைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது விதியின் பரிசு" என்றும் லே இன்று கூறினார்.
சூசன் லே லிபரல் கட்சி தலைவராக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பிருந்தே அவரது தாய் நோய் வாய்பட்டிருந்தார். பதவியேற்கும் நாளில்கூட அவரின் நிலைமைக் கவலைக்கிடமாகவே இருந்தது.
எனினும், மகள் கட்சி தலைவராவதை கண்ட பின்பே அவரது உயிர் பிரிந்துள்ளது என பலரும் உருக்கமாக பதிவிட்டுவருகின்றனர்.