எல்லை படை அதிகாரிகள் இருவரை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதி, கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு நாட்களாக இடம்பெற்ற தேடுதல் வேட்டையின் பிரகாரமே அவர் சிக்கியுள்ளார்.
டோங்கா நாட்டை சேர்ந்த குறித்த இளைஞன், 36 மற்றும் 54 வயதுடைய இரு அதிகாரிகளையே கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
நாடு கடத்துவதற்காக சிட்னி விமான நிலைத்துக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இரு நாட்களாக அவரை பிடிப்பதற்கு தேடுதல் இடம்பெற்ற நிலையில், மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 24 வயது யுவதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரமட்டா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பிறகு இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.