தமிழின அழிப்பு மற்றும் நக்பா (பாலஸ்தின மக்கள் அழிப்பு நாள்) ஆகிய பேரழிப்பு நினைவு நாளை முன்னிட்டு, மெல்பேர்ணில் இன்று பேரணி முன்னெடுக்கப்பட்டது.
பேரணியின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
மாநில நூலகத்திலிருந்து ஆரம்பமான இந்த பேரணி, சென் கில்டா கடற்கரையில் நிறைவு பெற்றது. பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.