மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது தடைசெய்யப்பட்ட நாஜி சின்னம் காட்சிப்படுத்தப்பட்ட விடயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
பாலஸ்தீனர்களின் இடம்பெயர்வைக் குறிக்கும் வகையிலான படத்திலேயே நாஜி சின்னம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், இஸ்ரேல் நாட்டின் தேசியக் கொடியும் அவமதிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பில் மாநில நாடாளுமன்றங்களிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையிலேயே சட்டத்தைமீறும் வகையில் மேற்படி பேரணியின்போது நாஜி சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. படங்கள் தொடர்பில் பொலிஸார் பரிசீலித்துவருகின்றனர்.
மெல்பேர்ணில் மே 18 இல் நடைபெற்ற இப்பேரணியில் சுமார் 2 ஆயிரம் பேர்வரை பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கோரப்பட்டது. பொறுப்புக்கூறலும் வலியுறுத்தப்பட்டது. பேரணியின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
சபா.தயாபரன்