ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வர்த்தகப் போரால் இவ்விரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, வர்த்தக உறவு பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
போப் லியோவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கிடையில் இரு கலந்துரையாடல் வத்திக்கானில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் சம்பந்தமாகவும், அதனை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு, இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
' உலகளாவிய பிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பின் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளன. மேலும் நெருக்கமான வர்த்தகம் மற்றும் மிகவும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதியில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்." - என்று ஆஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.