ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான பாதுகாப்பு உறவை பேணுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் அந்தோனி அல்பானீஸியுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி ஆணைக்குழுவின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை வர்த்தக பங்காளியாக மட்டும் அல்ல மூலோபாய பங்காளியாகவுமே ஐரோப்பா கருதுகின்றது எனவும் ஆணையாளர் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த மூலோபாய முக்கியத்துவத்துக்கமைய வலுவான பாதுகாப்பு உறவு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்கொரியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இதற்கு அவர் உதாரணம் காட்டியுள்ளார்.
இது தொடர்பில் எவ்வித உறுதிமொழியையும் பிரதமர் வழங்கவில்லை. இது பற்றிய பரீசிலனை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என பதிலளித்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.