ஆஸ்திரேலிய பிரதமருக்கும், போப் லியோவிற்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் நேற்று நடைபெற்றது.
போப் லியோவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது பூர்வக்குடி இளைஞர் ஒருவரின் கலைப்படைப்பை போப்புக்கு, நினைவு பரிசாக பிரதமர் வழங்கினார்.
மேலும் அமைதியை நிலைநாட்டுவதில் போப் லியோவின் பங்களிப்பு தொடர்பில் வரவேற்பு தெரிவித்தார்.
அகஸ்தீனிய ஒழுங்கின் தலைவராக போப் லியோ பல முறை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளார். எனினும், அவர் போப்பாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என கத்தோலிக்கத் தலைவர்கள் நம்புகின்றனர்.
2028 இல் சிட்னியில் நடைபெறவுள்ள உலக நற்கருணை மாநாட்டில் பங்கேற்பதற்குரிய அழைப்பையும், பிரதமர் அந்தோனி அல்பானீஸி மேற்படி சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக விடுத்தார்.