ஆஸ்திரேலியாவில் வட்டி வீதத்தை குறைக்கும் முடிவை மத்திய வங்கி எடுத்துள்ளது.
மத்திய வங்கி அதன் ஆளுநர் தலைமையில் இன்று கூடியது. இதன்போது சமகால மற்றும் எதிர்கால பொருளாதார நிலைவரம் , பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் ஆராயப்பட்டன. அதன்பின்னரே வட்டி வீதத்தை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4.1 வீதத்திலிருந்து 3.85 சதவீதமாக ரொக்க வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் ரொக்க வட்டி வீதமானது 4 சதவீதத்துக்குள் தக்கவைக்கப்பட்டுவந்த நிலையில் இம்முறையே 0.25 வீதமாக குறைக்கப்பட்டு, 3.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது பொருளாதார ரீதியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை வீதமும் மாறாதுள்ளது.