நியூ சவூத் வேல்ஸில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
சிட்னி தெற்கே கடும் மழை பெய்துவருவதால் காணாமல்போயுள்ள நபர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது. 49 வயது ஆணொருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தாம் இருந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மாநிலத்தில் 87 பகுதிகள் வெள்ள அபாய வலயத்தில் உள்ளன. அவை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.