தெற்கு மெல்பேர்ணில் பரபரப்பு: துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி: மூவர் வைத்தியசாலையில்!
கத்தியை வைத்திருந்தார் எனக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது, பொலிஸாரை நோக்கி காரை ஓட்டிவந்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தெற்கு மெல்பேர்ணிலுள்ள சிசில் தெருவில் இன்று மாலை 5 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திய ஏந்திய நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இரு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவரை கைது செய்ய முற்படும்போது,அதிகாரிமீது காரை மோதிய பெண்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளார்.
36 வயது யுவதியொருவரே உயிரிழந்துள்ளார். கார் மோதியதில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
காருக்குள் இருந்த 26 வயது இளைஞனின் கால் பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அவரும் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
கத்தியை வைத்திருந்த நபரும் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்திய நபருக்கும், காரை ஓட்டிவந்த பெண்ணுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.