டார்வின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், பொலிஸ் காவலின்போது பூர்வக்குடி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் கடந்த மே 27 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிறகு பூர்வக்குடி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் பூர்வக்குடி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இரண்டாவது மரண சம்பவமும் பதிவாகியுள்ளது.
மே 30 ஆம் திகதி டார்வின் விமான நிலையத்துக்கு வந்த 68 வயது பூர்வக்குடி முதியவர் ஒருவர் மதுபோதையில் இருந்தாகக் கூறி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு கண்காணிப்பு நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அங்கிருந்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட முதியவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் எனவும், நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்துக்குரிய காரணம் உரிய வகையில் அறிவிக்கப்படும்.