சர்வதேச விமான பயணத்தின்போது மது அருந்திவிட்டு ஆக்ரோஷமாக நடந்துகொண்ட பெண்மீது நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவரை வொல்லொங்காங், நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூ கலிடோனியாவில் இருந்து சிட்னிக்கு கடந்த 3 ஆம் திகதி வந்த விமானத்திலேயே இப்பெண் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுள்ள 64 வயதான அப்பெண், விமான இருக்கையில் இருந்து எழுந்து குழப்பம் விளைவித்துள்ளார்.
ஆவரை இருக்கையில் அமர்ந்துவதற்கு விமான ஊழியர்கள் முற்பட்டபோது அவர்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
விமானம் சிட்னி விமான நிலையத்துக்கு வருகை தந்த பிறகு பொலிஸாரின் உதவியுடன் அப்பெண் வெளியேற்றப்பட்டார்.