பிரிஸ்பேனில் 82 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 250 கிலோவுக்கு அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பெரடல் பொலிஸார் மற்றும் எல்லைப் படையினர் இணைந்தே போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
பொருட்கள் என்ற போர்வையிலேயே குறித்த போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதனை இறக்குமதி செய்த தரப்புகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.