பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயங்கரவாத வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, இஸ்ரேலிய அமைச்சர்கள் இருவருக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து மற்றும் நோர்வே ஆகிய 5 நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியில் முக்கிய பங்காளிகளான இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் இஸ்ரேலிய குடியேற்றத்தின் தீவிர ஆதரவாளர்களாவர்.
அத்துடன், காசாவில் போர் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர். யூத குடியேற்றத்துக்குரிய ஏற்பாடுகளையும் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு அமைச்சர்களுக்கு எதிராக பயயத் தடை மற்றும் பொருளாதாரத் தடை என்பன விதிக்கப்பட்டுள்ளன.