களியாட்ட விடுதியில் கத்தி ஏந்தி மிரட்டிய சிறுமிமீது துப்பாக்கிச்சூடு!
டவுன்ஸ்வில்லிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 17 வயது சிறுமி தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
குறித்த விடுதிக்குள் ஆயுதத்துடன் வந்த பெண்ணொருவர் அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றார் என பொலிஸாருக்கு நேற்று மாலை முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றவேளை, பெரிய கத்தியுடன் குறித்த சிறுமி அவர்களை அணுகியுள்ளனர்.
எச்சரிக்கைகளை பொருட்படுத்தாது, அவர் முன்னோக்கி வந்ததாலேயே அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் உடனடியாக முதுலுதளி வழங்கப்பட்டு அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் அங்கு தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.