விக்டோரியா மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
விக்டோரியாவில் 2024 மார்ச் முதல் 2025 மார்ச் வரையிலான காலப்பகுதிக்குள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 268 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்று இன்று வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்கள் 17.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். விக்டோரியாவில் பிணைச்சட்டங்கள்கூட கடுமையாக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டையின்போது நாளொன்றுக்கு 208 பேர்வரை கைதாகின்ற போதிலும், குற்றச்செயல்கள் குறைந்ததாக இல்லை.
வாகனம் கொள்ளை, கடை உடைப்பு, வீடுகளில் கொள்ளை, தாக்குதல் மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களே இவ்வாறு அதிகரித்துள்ளது.