நெதர்லாந்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நேட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் திட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கைவிட்டுள்ளார்.
எனினும், இம்மாநாட்டில் ஆஸ்திரேலியாவின் சார்பில் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் பங்கேற்பார்.
கனடாவில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதியுடன், பிரதமர் இரு தரப்பு சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்.
எனினும், குறித்த மாநாட்டில் இருந்து ட்ரம்ப் அவசரமாக வாஷிங்டன் சென்றதால் சந்திப்பு நடக்கவில்லை.
இதனால் நேட்டோ மாநாட்டில் பங்கேற்று, ட்ரம்ப்பை சந்திக்க, அல்பானீஸி திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அணுகுமுறையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.