ஈரான்மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு அல்பானீஸி அரசாங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதை தொழிற்சங்க தலைவரும், லேபர் கட்சியின் முன்னாள் செனட்டருமான டக் கெமரூன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஈரான்மீதான அமெரிக்காவின் தாக்குதல் சட்டவிரோதமானது: ஐ.நா. சாசனத்தை மீறும் செயல் என தாம் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய வெளிவிவகாரக் கொள்கையென்பது அமெரிக்காவை சார்ந்திருக்கக்கூடாதெனவும், ஆக்கஸ் ஒப்பந்தத்துக்காக இப்படியொரு முடிவை ஆஸ்திரேலியா எடுத்துள்ளதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை எனவும் மூத்த தொழிற்சங்கவாதியான டக் கெமரூன் குறிப்பிட்டுள்ளார்.