மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரால் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விலை உயர்வுகள் மூலமே இவ்வாறு தாக்கங்கள் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜயசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கமைய மேற்படி வழித்தடம் மூடப்பட்டால் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிக்கும்.
ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை உயரும். அதன்மூலம் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுபோக்குவரத்து கட்டணம், விமானக் கட்டணம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.