மேற்கு சிட்னியில் காணாமல்போயுள்ள தமிழ் யுவதியை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அனிஷா ஷாதீக் எனும் 18 வயது யுவதியே கடந்த திங்கட்கிழமை முதல் இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு விசாரணை மற்றும் தேடுதல் என்பன இடம்பெற்றுவருகின்றன.
இவர் வீட்டில் இருந்து வெளியேறும்போது தொலைபேசி மற்றும் பணம் என்பவற்றை எடுத்து செல்லவில்லை என குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆஸ்திரேலிய தமிழ் முஸ்லிம் சமூகத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வருகின்றார்.