மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் குதிரை உதைத்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
குதிரை தொழுவத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.