பாக்டீரியா நோயான மெலியோய்டோசிஸால் குயின்ஸ்லாந்தில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து மற்றுமொரு ஆபத்தான நோய் இதுவென என்று சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு ஆஸ்திரேலியாவில் மெலியோய்டோசிஸ் பரவலாக உள்ளது. அங்கு இதை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மண் மற்றும் நீரில் காணப்படுகின்றன.
காயம், சுவாசித்தல் அல்லது அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றது. மழைக்காலத்திலேயே தொற்று தாக்கம் அதிகமாக காணப்படும்.
இவ்வாண்டு இதுவரையில் மேற்படி நோயால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1981 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதே வேகமாக பரவிவருகின்றது. மெலியோய்டோசிஸால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.