ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ்மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சைபர் குற்றவாளி வாடிக்கையாளர் அழைப்பு மையத்தை குறிவைத்து மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை தளத்தை அணுகியே இணைய குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும், திங்கள் கிழமையே இச்சம்பம் நடந்துள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 6 மில்லியன் பேரின் தகவல்கள் திரட்டப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.
வாடிக்கையாளர்களின் பெயர்கள், மின்அஞ்சல் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், பயண நிகழ்ச்சி நிரல் மற்றும் பிறந்தநாள் தொடர்பான விவரங்களே களவாடப்பட்டுள்ளன.
கடன் அட்டை மற்றும் தனிப்பட்ட நிதி தொடர்பான தகவல்கள் தரவு கட்டமைப்பில் சேமிக்கப்படவில்லை எனவும், அவை திருடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வாடிக்கையாளர்களிடம் குவாண்டாஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தரவு கட்டமைப்பு தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.