ஜி - 7 மாநாட்டின்போது ஆஸ்திரேலிய பிரதமரை, அமெரிக்க ஜனாதிபதி சந்திக்க முடியாமல்போனமை தொடர்பில் கன்பராவிடம், வாஷிங்டன் கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், அமெரிக்க இராஜாங்க செயலருடன் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போதே இவ்வாறு வருத்தம் தெரிவிக்கப்பட்டது என பெனி வோங் குறிப்பிட்டார்.
45 நிமிடங்கள் நடைபெற்ற மேற்படி இரு தரப்பு சந்திப்பின்போது ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம், பசுபிக் பிராந்திய பாதுகாப்பு உட்பட முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு போர் சூழ்நிலை காரணமாகவே ஜி - 7 மாநாட்டில் இருந்து ஜனாதிபதி ட்ரம்ப் முன்கூட்டியே வெளியேறினார் எனவும் ஆஸி. வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக்கான ஏற்பாடு பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.