360 கிலோ ஐஸ் போதைப்பொருளை மிகவும் சூட்சுமமான முறையில் இறக்குமதி செய்ய முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிட்னியை சேர்ந்த இரு ஆண்கள் ஹோல்ராய்டு மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் மெல்பேர்ணை சேர்ந்த 39 வயது இளைஞர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டு, ஓடுகள் இறக்குமதி என்ற போர்வையிலேயே போதைப்பொருளை கடத்துவதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 333 மில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்தே ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருளை கடத்துவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.