குயின்ஸ்லாந்திலுள்ள பண்ணையொன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது பெருமளவான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தோட்டாக்கள், வெடிமருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டு வன்முறை தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாகவே இத்தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போதே ஆயுதங்கள் சிக்கியுள்ளன.
45 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிமைப்பத்திரம் பெறாத துப்பாக்கிகளும் அவர் வசம் இருந்துள்ளதால், இதன் பின்புலம் பற்றி பலகோணங்களில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.