விக்டோரியன் நகரமான டெய்சி ஹில்லில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நேற்று மாலை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதன்போது ஆயுதம் ஏந்திய நபரொருவர் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நடந்துகொண்டார்.
அவரை கைது செய்வதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவர் பொலிஸாரை நோக்கி துப்பாகிச்சூட நடத்தியுள்ளார். பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விக்டோரியா பொலிஸாரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.