சிட்னி மேற்கு பகுதியில் 21 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்தனர் என இரு சிறார்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
16 மற்றும் 17 வயதுடைய சிறார்கள்மீதே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவுவேளையிலேயே கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
21 வயது இளைஞன் தனது காதலியுடன் பயணித்துக்கொண்டிருந்தவேளையிலேயே அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சம்பவம் தொடர்பில் இரு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் பொலிஸ் பிணை மறுக்கப்பட்டது. இன்று பரமட்டா நீதிமன்றத்தில் இருவரையும் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.