பெண்ணை, நபரொருவர் தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவமொன்று மெல்பேர்ண் வடக்கு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
35 வயது பெண்ணொருவர்மீதே இவ்வாறு திரவம் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் எரிகாயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
41 வயதான சந்தேக நபர், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார். நவம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தப்படவுள்ளார்.