கிழக்கு மெல்பேர்ணில் ஆல்பர்ட் வீதியிலுள்ள யூத வழிபாட்டுத் தலம் தீ வைப்பு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
சம்பவத்தின்போது ஜெப ஆலயத்துக்குள் சுமார் 20 பேர் இருந்துள்ளனர் எனவும், தீ வைக்கப்பட்ட பின்னர் அவர்கள் பின்கதவு வழியாக வெளியேறினர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
யூத வழிபாட்டு தலத்தின் முன்பக்க நுழைவாயில் சேதமடைந்துள்ளது.
யூத எதிர்ப்பு - வெறுப்பு நடவடிக்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
அதேவேளை, மெல்பேர்ணிலுள்ள இஸ்ரேல் உணகவமொன்றில் நேற்றிரவு போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர் எனவும், பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தனர் எனவும் கூறப்படுகின்றது.
ஒருவர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.