ஆஸ்திரேலியாவுக்கு 30 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கிலிருந்து கடந்த 3 ஆம் திகதி பிரிஸ்பேனுக்கு வந்த 18 வயதான இரு யுவதிகள் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.
அவர்கள் கொண்டுவந்த நான்கு 'சூட்கேஸ்"கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
அவர்களுக்கு கடவுச்சீட்டுகள் பெறுவதற்குரிய ஏற்பாடுகள், விமான ரிக்கெட் மற்றும் தங்குமிட வசதிகளை செய்துகொடுத்திருந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு பேரும் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் மூவருக்கு பிணை வழங்கப்பட்டது. 18 வயது யுவதியொருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.