தீ வைப்பு தாக்குதலுக்கு இலக்கான மெல்பேர்ண் ஜெப ஆலயத்துக்கு இன்று நேரில் விஜயம் மேற்கொண்ட விக்டோரியா மாநில பிரிமீயர் ஜெசிந்தா ஆலன், யூத சமூகத்துக்கு தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
வெள்ளிக்கிழமை இரவுவேளையிலேயே கிழக்கு மெல்பேர்ண் ஆல்பர்ட் வீதியிலுள்ள யூத வழிபாட்டுதலம் இலக்கு வைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் 34 வயது நபர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை பல தரப்பினரும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையிலேயே இன்று காலை ஜெப தேவாலயத்துக்கு சென்று, யூத தலைவர்களுடன் பிரீமியர் ஆலோசனை நடத்தினார்.
' யூத எதிர்ப்புக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அத்தகைய வெறுப்பு சம்பவங்களுக்கு இங்கு இடமில்லை." - என்று பிரீமியர் ஜெசிந்தா ஆலன் குறிப்பிட்டார்.