கட்டாய விசா நிபந்தனைகளை மீறிய ஆப்கானிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியில் தங்கியுள்ள 34 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசா விதிமீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 99 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.