சிட்னி இன்னர் வெஸ்டிலுள்ள சலூனொன்றை தீ வைத்து கொளுத்திய இரு சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி இன்று பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
இருவர் சலூனுக்குள் நுழைந்து எரிபொருளை ஊற்றி, பின்னர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்வதை காண முடிகின்றது.
குறிப்பாக தீ வைத்த நபரின் கால் பகுதியிலும் தீ பரவியது. அவர் தீயுடன் ஓடுவதையும் காணமுடிகின்றது.
சலூனுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.