பிரிஸ்பேன் மேற்கே உள்ள மிருகக்காட்சிசாலையில் பெண்ணொருவர், சிங்கத்தின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கை பகுதியை இழந்துள்ள அவருக்கு மேலும் இரு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதென தெரியவருகின்றது.
50 வயது பெண்ணொருவரேயே சிங்கம் கடித்துள்ளது எனவும், படுகாயம் அடைந்த அவரை பணியாளர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
அவர் தற்போது குணமடைந்துவருகின்றார்.
நேற்று நடைபெற்ற சம்பவத்தையடுத்து மிருகக்காட்சிசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. நாளை மீள திறக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது.