ரொக்க வட்டி வீதத்தை மத்திய வங்கி குறைக்கும் என பொருளாதார நிபுணர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறானதொரு முடிவை மத்திய வங்கி எடுக்கவில்லை. எனினும், ரொக்க வட்டி வீதம் 3.85 ஆக தக்கவைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று கூடியது. இன்றைய தினமும் கூட்டம் தொடர்ந்தது. இதன்போது பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இதனையடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக நிதிச்சபையில் அறுவரும், எதிராக மூவரும் வாக்களித்துள்ளனர்.
மத்திய வங்கியின் கடந்த பெப்ரவரி மற்றும் மே மாதக் கூட்டங்களின்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.