மெல்பேர்ணில் இஸ்ரேலியருக்கு சொந்தமான உணவகமொன்றில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், மூவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதல், கலவர நடத்தை மற்றும் சொத்தகளுக்கு சேதம் விளைவிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளே இரு பெண்கள் மற்றும் ஆணொருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவே போராட்டக்காரர்கள் இவ்வாறு உணவகத்தில் திரண்டிருந்தனர்.
உணவகத்தக்குள் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மெல்பேர்ண் கிழக்கிலுள்ள ஜெப ஆலயம்மீது வெள்ளிக்கிழமை இரவு தீ வைப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்வேளை வழிபாட்டு தலத்துக்குள் 20 பேர்வரை இருந்தனர். சம்பவம் தொடர்பில் 34 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பத்துடன் ஏதேனும் அமைப்பு தொடர்பு பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.