கடும் வறட்சி காரணமாக ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்துவருகின்றது. 2027 ஆம் ஆண்டுவரை இந்நிலைமையில் இருந்து மீள முடியாது என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்குரிய தீவனம் பற்றாக்குறையாகிவிட்டதால் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாயிகள், ஆடுகளை விற்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், இனப்பெருக்க பெண் ஆடுகளின் எண்ணிக்கையை அடுத்த 12 மாதங்களில் 9 சதவீதமாக குறைப்பதற்கும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதால் ஆடுகளுக்குரிய விலையும் சந்தையில் எகிறியுள்ளது.
அதேவேளை, இது ஏற்றுமதியிலும் தாக்கம் செலுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.