சர்வதேச விமான பயணத்தின்போது பெண் பயணியொருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட, சிட்னியை சேர்ந்த நபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 மே 29 ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து வந்த விமானத்திலேயே அவர் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
36 வயதான குறித்த நபர், பெண் பயணியின் தொடை உள்ளிட்ட பகுதிகளை தவறான நோக்கில் தொட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
விமான பணியாளர்களிடம் இது தொடர்பில் முறையிட்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வேறொரு இருக்கைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணையும் இடம்பெற்றது.
விமானம் தரையிறங்கிய பின்னர் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த குற்றத்துக்காக அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.