வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு, ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்தே அமெரிக்காவுக்க பெருமளவு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்படத்தக்கது.
இத்தடை உடனடியாக அமுலுக்கு வராது.
ஏனெனில் மருந்து உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியை அமெரிக்காவிற்கு நகர்த்துவதற்கு சலுகை காலம் வழங்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா கடந்த வருடம் மாத்திரம் அமெரிக்காவுக்கு 2.2 பில்லியன் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மருந்து ஏற்றுமதியில் இது 40 சதவீதமாகும்.
அதேவேளை, அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு யோசனையானது கவலைக்குரியது என்று ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார்.