மெல்பேர்ணிலுள்ள வைத்தியசாலையொன்றில் பணியாளர்களுக்குரிய மலசலக்கூடத்தில் சக ஊழியர்களை இரகசியாக படம் பிடித்துள்ளார் எனக் கூறப்படும் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான குறித்த வைத்தியர் மலசலக்கூடத்தில் கமரா பொருத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த வைத்தியரின் வீடு இன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
கடந்த 03 ஆம் திகதியே மலசலக்கூடத்தில் தொலைபேசிபோன்ற கமரா கருவியொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர் குறித்த வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக இருந்துள்ளார்.