ஆஸ்திரேலியாவுக்கு ஐஸ் போதைப்பொருள் இறக்குமதி செய்ய முற்பட்டனர் எனக் கூறப்படும் இரு பிரான்ஸ் யுவதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பிரிஸ்பேன் விமான நிலையம் வந்த விமானத்தில் பயணித்த 19 மற்றும் 20 வயதுடைய யுவதிகளே 32 கிலோ ஐஸ் போதைப்பொருளை கடந்தி வந்துள்ளனர்.
அவர்கள் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.
இவர்கள் விசாரணைகளின் பின்னர் ஜுலை 9 ஆம் திகதி பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால், காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.